சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைக ளாக மாற்ற காலக்கெடு நாளையுடன் முடிவு உணவுத்துறை  அமைச்சர்  தகவல்!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்ற கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது . சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்திடமுதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 அதன் அடிப்படையில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை வட்ட வழங்கள் அலுவலரிடம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் பல சலுகைகள் கிடைப்பதில் லை பொங்கல் பரிசுத் தொகையும் அவர்களுக்கு கிடையாது .எனவே சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்று அவர்களுக்கு அரசு அவகாசம் அளித்திருந்தது. இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அதற்கான விண்ணப்பங்களை குடும்ப அட்டையின் நகலை இணைத்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார். 

அதற்கான இணைய தள முகவரிகள்www tnpds.gov .inஎன்ற இணையத்திலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர்கள் இடமும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் பெறப்பட்டதும் முறையாக  பரிசீலித்து சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்றித் தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.