தமிழகத்தில் அனைத்து பேருந்துகளும் இயங்க அனுமதி தமிழக அரசு உத்தரவு!

  கொரோனா தொற்று காரணமாக சில மாதங்களாக அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது .இருப்பினும்50 சதவீத பணிகள் மட்டுமே பயணிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

 தொற்று தற்போது குறைந்து வந்த இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவீத பயணிகளுடன்  பொதுமக்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக்கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

 இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பேருந்துகளில் பயணம்  செய்யும்பொழுது முக கவசம் அணிந்து கொள்வது  கட்டாயம்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது.