உச்சத்தில் பூக்கள் விலை மல்லிகை, கனகாம்பரம் விலை எவ்வளவு தெரியுமா?

 பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்து திண்டுக்கல் நிலக்கோட்டை மார்க்கெட்டில் விற்பனையாகிறது. அதிகபட்சமாக மல்லிகை பூ கிலோ 4000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.கனகாம்பரம் கிலோ 2000 ரூபாய்க்கு  விற்பனையாகி வருகிறது.

 மார்கழி மாதத்தில் கோவில்களுக்கு பூக்கள் தேவை அதிகம் இருப்பதாலும், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷங்களுக்கும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால் தேவை அதிகரிப்பதால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.