தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி  காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம்

 தஞ்சாவூர்

 திருவாரூர்

 விழுப்புரம்

 கடலூர்

 புதுக்கோட்டை

 சிவகங்கை

 காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.