800 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் நடக்கும் அதிசய நிகழ்வு இன்று நடைபெறும். 

 வியாழன் சனி கோள்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு!  சூரிய மண்டலத்தில் வியாழன் சனி ஆகிய இரு கோள்களும் மிகப் பெரிய கோள்களாகும்.   இந்த இரண்டு கிரகங்களும் மிக நெருக்கமாக வரும் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. அதாவது இன்று சூரிய மறைவிற்குப் பிறகு மாலை 6.30 மணிக்கு தென்மேற்கு திசையில் வியாழன், சனி ஆகிய இரண்டும் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டு நிற்பது போன்ற காட்சிகள் தென்படும்

. இந்த இரண்டு கோள்களும் நேற்றைய தினம் நெருங்கிய நிலையில் காணப்பட்டன. ஆனாலும் இன்றுதான் மிக நெருக்கமாக வருகின்றன. இதை வெறும் கண்களால் பார்க்கும்போது இரண்டு கோள்களும் இடித்துக்கொண்டு  இருப்பது போல நம் கண்களுக்குத் தோன்றும். ஆனால் பைனாகுலர் வழியே நாம் அதைப் பார்க்கும் பொழுது சிறிய இடைவெளி உள்ளதை தெளிவாக காணலாம்.

 அடுத்தடுத்து அதாவது நாளை நாளை மறுநாள் அடுத்தடுத்த நாட்களில் இந்த இரண்டு கோள்களுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்லும் அதையும் நாம் பார்க்க இயலும். மக்கள் அனைவரும் இதை  இன்று மாலைபார்க்கலாம். இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி வளைதளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.