கல்லூரி மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு .

 கல்லூரி மாணவர்களுக்கு 2020 மற்றும் 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவி தொகை பெறுவதற்கு வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பதிவேற்றம்செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.

 இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் சி. காமராஜ் அவர்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை  விவரங்கள் இதோ: நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை சார்ந்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவேற்றும் பணிகள் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

எனவே மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை விரைவாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும், அனைத்து கல்லூரிகளுக்கும் முழுமையான கோப்புகளை சமர்ப்பித்து உள்ளதை உறுதி செய்வதுடன் இந்தப் பணிகள் தொடர்பான கல்வி நிறுவனங்கள் தெரிவிக்கும் இடர்பாடுகளை இயக்குனராகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனவே  கல்லூரி மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.