தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் .எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? 

 சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்

* திருப்பூர்

* நாமக்கல்

* கரூர்

* திண்டுக்கல் 

 ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

 மேலும் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வழக்கமாக மழையை விட இந்த ஆண்டு 4 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாகவும்,  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.