ஒன்பது கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் தலா ரூபாய் 2000 பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்!!

 விவசாயிகள் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000 பாரதப் பிரதமர் அவர்கள் வழங்க உள்ளார். டிசம்பர் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000 பிரதமர் நரேந்திர மோடி வழங்க உள்ளார்.

 இத்திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .மொத்தம் 18 ஆயிரம் கோடி செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 வருடத்திற்கு மூன்று தவணைகளாக ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 6000 செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இயற்கையை பெரிதும் நம்பியே விவசாயம் உள்ளதால் தங்களது செலவுகளை எதிர்கொள்ள போராடும் சிறு, குறு விவசாயிகளுக்கு  இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.