அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் தொடக்கம்!! 

 நமது தமிழ் செய்தி வளைதளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ உங்களுக்காக: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் சிறை நிரப்பும் போராட்டங்களை தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

 அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ வின் 2019ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியது. இந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி தொடங்கிய போராட்டங்கள் 10 நாள் தொடர்ந்தன .அதன்பிறகு நீதிமன்ற தலையீட்டின் தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினார்கள் .

இந்த போராட்டத்தின்போது தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரத்து 68 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றும் வழக்கை எதிர் கொள்பவர்களுக்கு  ஓய்வூதியம் கிடைப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தபோது அதை அரசு ஏற்கவில்லை. இதனால் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

 2019ஆம் ஆண்டு  போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஒழுங்குமுறை நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் .என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 5ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் திரு மு .அன்பரசு அவர்கள் தெரிவித்துள்ளார். ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் மண்டல அளவில் போராடுவதற்கான முன்னேற்பாடுகளை திட்டமிட ஆயத்த மாநாடு நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

அதன்பிறகு பிப்ரவரி 2ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் திரு அன்பரசு அவர்கள் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள நமது தமிழ் செய்தி வளைதளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.