ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிப்பு! இந்த செல்லிடப்பேசி களில் மட்டும்.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பழைய ஒஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த முடியாது எனவும், ஐஓஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன் ஆண்ட்ராய்ட் 4. 0.3 அல்லது அதற்கு முன்பு வெளியான ஓஎஸ் கொண்டிருக்கும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையானவர்கள் புதிய ஓஎஸ் கொண்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் இந்த செய்தியானது பலருக்கு கவலை தரும் செய்தியாக இருக்காது. எனினும் பழைய ஓஎஸ் கொண்ட சாதனங்களை பயன்படுத்திவோர் புதிய ஓஎஸ் கொண்ட சாதனங்களுக்கு அப்டேட் செய்து கொள்வது நல்லது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.