தமிழகத்தில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

 .தமிழகத்தில் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதிநிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது .

இதன் தொடர்ச்சியாக இனிவரும் இரண்டு நாட்களும் வறண்ட வானிலையே காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது .

அதாவது வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் ,புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வ அறிக்கை இன்று வெளியிட்டுள்ளது. இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ்ச் செய்தி வளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.