1500 காலியிடங்களை நிரப்ப வேண்டும் முதுகலை பட்டதாரி  ஆசிரியர்கள் கோரிக்கை! 

 பள்ளிக்கல்வித் துறையில் நிரப்பப்பட உள்ள1, 500 காலிபணியிடங்களை சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து 10 மாதங்களாக பணி நியமனம் பெறாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 பள்ளிகளில் 1,500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் தேவை அதிகரித்துள்ளது . அப்பணியிடங்களை  சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருப்போரை நிரப்ப வேண்டும் என தமிழக முதல்வரிடம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.