நீங்கள் குரூப் 1 தேர்வு எழுதுபவரா? இதோ தேர்வுக்கு விளக்கம் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்! 

 நமது தமிழ் செய்தி வளைதளத்தில் பல்வேறு கல்வி சார்ந்த தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் பதிவிடப்பட்டு வருகிறது. பார்த்து பயனடையுங்கள். குரூப்-1 தேர்வுக்கு விளக்கம் பெற கட்டணமில்லா  தொலைபேசி எண்ணை ஜனவரி 8ஆம் தேதி வரை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது .

தமிழகத்தில் குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது. அது குறித்த கூடுதல் விளக்கங்கள் தேவைப்பட்டால் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது 

.மேலும் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியில் உங்களுடைய சந்தேகங்களை தெரிவித்து விளக்கம் பெறலாம் என்றும்  அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மின்னஞ்சல் முகவரி contacttnpsc,gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிகள் இலவச தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

 விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் நடத்தவிருக்கும் கொள்குறிவகை தேர்வுகளுக்கு பயன்படுத்தப்படும் விடைத்தாள்கள் பல சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள விடைத்தாள்களில் மாதிரி படிவம் கையாளும் முறை குறித்து விளக்க குறும்படமும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.