நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு; சேலம் மாணவி மாநில அளவில் பத்தாம் இடம்: இதய நிபுணராக விருப்பம்

 



நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவி தேர்ச்சி. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரம்யம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டஇப்போது 7.5% உள்ள இட ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரம்யா,தமிழக அளவில் பத்தாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.நெசவுத் தொழிலாளியின் மகளான ரம்யா, இதய நோய் மருத்துவ நிபுணராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது.இதைத்தொடர்ந்து 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவ மாணவிகளின் பட்டியலில், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரம்யா இடம் பெற்று சாதனை‌.