நவீன இந்தியாவின் சிற்பி, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் இன்று.

 


 

 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பலரும் உயிர் தியாகம் செய்து நமக்கு விடுதலையை பெற்றுத் தந்துள்ளார்கள். அந்த வரிசையில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி, இன்னும் பல பெருமைகளுக்கு உரியவர் தான் நம் பண்டித ஜவஹர்லால் நேரு, இந்த நேருவின் பிறந்த நாள் இன்று செப்டம்பர் 14ஆம் தேதி ஆண்டுதோறும்  குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை நினைவு கூறும் விதமாக பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, குடும்ப கட்டுப்பாடு, பொருளாதாரம் ,என்று எந்தத் துறையை எடுத்தாலும் இந்தியா இன்று இந்த அளவுக்கு உள்ளது என்றால் அதற்கு காரணம் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் அன்று போட்ட விதைதான் என்று சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அவரின் பல்வேறு திட்டங்கள் அணைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொருளாதார திட்டங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், மின்சாரம், விண்வெளி ஆராய்ச்சி , பாரதத்தை நிர்மானித்தவர், குழந்தைகளின் உறவினன், ஜவஹர்லால் நேரு ஒரு மந்திரம் அவரின் புகழ் நிலைக்கட்டும் என்று பலர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

 பண்டித நேரு அவர்கள் பிறந்த தினமான இன்று குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்லுவோம், குழந்தைகளிடம் அன்பு செலுத்துவோம்,  அவர்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராடுவோம். என நாம் அனைவரும் இன்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.நன்றி!