உலகின் தலை சிறந்த நகரங்கள் பட்டியலில் டில்லிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? 

 ஒவ்வொரு வருடமும் உலகில் தலைசிறந்த 100 நகரங்களை தேர்வு செய்கிறது. கனடாவை தலைமையிடமாகக் கொண்ட ரிசோனன்ஸ்  கன்சல்டன்சி லிமிடெட் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த நகரங்களின் தரவரிசையில் பட்டியலை தற்பொழுது வெளியிட்டுள்ளது

. நகரங்களின் தரம், நற்பெயர், முக்கியத்துவம் அதிக திறமையானவர்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை, மற்றும் வணிகத் தலைவர்கள் உள்ளிட்ட மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் போட்டிக்கான அடையாளம் கொண்ட உலகளாவிய  நகரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த நகரங்கள் பட்டியலை இந்த நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

 இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில்

*  லண்டன் 

*நியூயார்க்

* பாரிஸ்

*மாஸ்கோ

 * டோக்கியோ

 ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் தலைநகரமான டில்லிக்கு 62வது இடம் இந்த வருடம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதிலும் சிறந்த 100 நகரங்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் டில்லி என்பது குறிப்பிடத்தக்கது .இந்த டில்லி தலைநகரம் கடந்த ஆண்டு இந்த தர வரிசை பட்டியலில் 81 ஆவது இடத்தில் இருந்து தற்போது 62 ஆவது இடத்துக்கு வந்திருப்பது இந்தியர் ஆகிய நம் அனைவருக்கும் பெருமையான ஒரு விஷயம் தானே, இதுபோன்ற போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்திகளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.