டிசம்பர் இரண்டாம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் உயர் கல்வித்துறை தகவல் 

.கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன .இந்நிலையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர்  அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 டிசம்பர் இரண்டாம் தேதி முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதுநிலை படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு டிசம்பர் இரண்டாம் தேதி முதல்  நேரடி வகுப்புகளில்  மாணவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்ட மாணவர்கள் ஏற்கனவே தங்கிய விடுதிகளில் தங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.