முதுநிலை சித்தா, ஹோமியோபதி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவக் கவுன்சில்றிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள ராதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆத்தூரில் உள்ள ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை ஓமியோபதி மருத்துவ படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சென்னை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் www.tnhealth.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இந்த மாதம் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய இதில் கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.