மருத்துவ படிப்பிற்கு தேர்வான மாணவர்கள் நாளை தாங்கள் தேர்ந்தெடுத்த மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் திடீர் அறிவிப்பால் மாணவர்களுக்கு பேரதிர்ச்சி! 

 நடப்பு கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. மாணவர்களும் அலுவலர்களுக்கும் இடையே கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்பட்டு கலந்தாய்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முழு பாதுகாப்புடன் கலந்தாய்வு இன்று நடத்தப்பட்டது .

 முதல் கட்டமாக பொதுப்பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்களுக்கு முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேர்க்கை ஆணையை இன்று வழங்கினார். இந்நிலையில் மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் இன்று தேர்வான மாணவர்கள் அனைவரும் நாளை அவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

 வெளியூர்களிலிருந்து கவுன்சிலிங் காக மட்டும்  தங்களை தயார்படுத்திக் கொண்டு வந்த மாணவர்களுக்கு பெரும் பேரதிர்ச்சியாக உள்ளது .எனவே இந்த உத்தரவை ஒரு வார காலத்திற்கு நீட்டித்து வைக்குமாறு மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது 

.பொதுவாக மருத்துவக் கல்லூரிகளில் தேர்வான மாணவர்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுப்பது வழக்கம் .ஆனால் தற்போது வரும் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு வருவதன் காரணமாக அதற்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சான்றிதழ்களில் சேர்க்கை தேதி 19 ஆம் தேதி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி!