தொலைநிலை கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்வழி படிப்பு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து வழக்கு !

 நமது தமிழ் செய்தி வளை தளத்திற்கு கிடைத்த தகவலின்படி தொலைநிலை கல்வியில் பட்டம் பெற்றவருக்கு தமிழ் வழியில் படித்த அதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது எதிர்த்த வழக்கில், பல்கலைக்கழகங்கள் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது 

.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தசக்திராவ் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு சட்டப் படிப்பை தமிழ் வழியில் முடித்துள்ளேன். டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய துணை ஆட்சியர், டிஎஸ்பி.
  வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 குரூப்1 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தேன் மற்றும் பிரதான எழுத்துத் தேர்வு நேர்முகத் தேர்வில் பங்கேற்று கடந்த டிசம்பர் 9 ல் வெளியான தேர்வு பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. தமிழ் வழியில் கல்வி பயின்று 20 சதவீத இட ஒதுக்கீடு எனக்கு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டை தொலைநிலைக்கல்வியில் பயின்றோருக்கு கொடுத்துள்ளனர்

.தொலைநிலைக்கல்வியில் சில பாடங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நடத்தப்படுகிறது. தொலைநிலை கல்வியில் இட ஒதுக்கீட்டின் மூலம்  பணிபெற்று உள்ளனர் .எனவே தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டின்படி தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதித்தும் கல்லூரிக்கு சென்று முழு நேரமாக தமிழ் வழியில் படித்தவர்கள் தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட்டுஅதன் பிறகு  பணி நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார் .இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கிருபாகரன் ,புகழேந்திஆகியோர் இந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர் மனுதாரராக சேர்த்து அவர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர். 

இதுபோன்ற செய்திகளை தெரிந்துகொள்ள நமது தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே.!