அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அறிவிப்பு! பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

 மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தி வருகிறது .

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .2020 மற்றும் 2021 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தேசிய திறனாய்வு தேர்வுக்கு( NTSE) தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 21 .11 .2020 முதல் 30. 11 .2020 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தை ரூபாய். 50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30. 11. .2020 பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.