கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் மத்திய அரசு அறிவிப்பு! 

 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றும் உன்னத பணியில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் போர்வீரர்களாக பணியாற்றி வருகிறார்கள் இதில் பல மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

 அவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ படிப்பில் புதிய இட ஒதுக்கீடு திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

 2020 மற்றும் 21 ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் சேர கொரோனா வார்டில் பணியாற்றி உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் 2020 இல் பெறப்பட்ட தர வரிசை அடிப்படையில் ஆன்லைன் விண்ணப்பத்தில் மூலம் மருத்துவ கவுன்சில் கமிட்டி (என்சிசி) இதற்கான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கும். மத்திய ஒதுக்கீட்டில் இருந்து எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படும் என சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.