பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? தமிழக முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு !!!
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதன்போது பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையில் பெயரிலேயே பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஏற்கனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடி உள்ளது என்றும் இணையதளம் வாயிலாக பாடம் நடத்தப் பட்டாலும் அவர்களுக்கு சந்தேகம் மற்றும் புரிந்து கொள்ள முடியாத சூழல் உள்ளதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கொரோனா குறைந்து கொண்டே இருப்பதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதன் பெயரிலேயே பள்ளிகளை திறக்க அறிவிப்பு வெளியிட்டோம். ஆனால் கொரோனாமேலும் அதிகரிக்கும் என்று கூறுவதால் அதனையும் கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் பல செய்திகளை தெரிந்துகொள்ள நமது தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்து இருங்கள் நண்பர்களே!நன்றி.
0 Comments
Post a Comment