ஒரேநாளில் கணிசமாக சரிந்த தங்கத்தின் விலை! 

 கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்த வண்ணம் உள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 832 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 37, 152 க்கு விற்பனையானது. 

அதேபோல ஒரு கிராம்  தங்கத்தின் விலை ரூபாய். 104 குறைந்து 4, 644 க்கு விற்பனையானது.

 வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது .ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 1.80 குறைந்து ரூபாய் 64.50 க்கு விற்பனையானது. இதுதான் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.