விவசாய அறுவடை இயந்திரங்களை இயக்கும் விமானிகள்!

 கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல துறைகளில் பணி புரிபவர்களும் வேலையற்று உள்ளார்கள் அந்த நிலையில் விமானத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் ஏற்பட்ட வேலை இழப்பு காரணமாக விமானிகள விவசாய அறுவடை இயந்திரங்களை தற்போது இயக்கி வருகின்றனர்.

 சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சர்வதேச போக்குவரத்து சேவையான விமான சேவையும் முடக்கப்பட்டது.இந்த  நிலையில் அதில் பணிபுரிந்தவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்

. இந்த பாதிப்பை ஈடுகட்டும் வகையில் விமான விமான ஓட்டிகள் ஆஸ்திரேலியாவில் விவசாய அறுவடை இயந்திரங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் இயக்கு வருவதாக அவர்கள் கூறியுள்ளார்கள். தங்களின் மறுவாழ்வு தொடர்பாக தெரிவித்துள்ள விமானி ஒருவர் வானில் பறந்த நாங்கள் எதிர்பாராத வகையில் தரையிறக்கப்பட்டாலும் எங்கள் வாழ்வு தரை இறங்கவில்லை என்று பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

விவசாயம் எங்களை மீண்டும் மேலே பறக்கவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் விமானத்தில் ஒரு நாளைக்கு 10 மணி முதல் 12 மணி நேரம் தொடர்ந்து பல இயந்திரங்களை இயக்கினாலும் எங்களுக்கு விமான இயந்திரமும் விவசாய எந்திரமும் வேறு வேறு இல்லை என்றும் இவை இரண்டுமே ஒன்று போல் தாங்கள் பார்ப்பதாகவும் பெருமிதத்துடன் அந்த  விமான ஓட்டி கூறியுள்ளார்.நன்றி!