சமையலர் மற்றும் துப்புரவு பணிக்கு திரண்ட பட்டதாரி பெண்கள் !

 சமையலர் மற்றும் துப்புரவு பணியாளருக்கு நேர்காணலுக்கு குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொட்டும் மழையையும் பாராமல் பட்டதாரி பெண்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள்

. குமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் 12 சமையலர் பணியிடங்கள் மற்றும் 4 துப்புரவாளர் பணி இடங்கள் காலமுறை ஊதியத்தில் 1,என 17 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தது. இதற்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சமையல் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி வரை பெறப்பட்டது இதற்கான நேர்காணல் நாகர்கோவில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது .நேற்று காலை கொட்டும் மழையிலும் நூற்றுக்கணக்கான  பட்டதாரி பெண்கள்  நேர்காணலுக்கு திரண்டு இருந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை மறந்து நெருக்கமாக நீண்ட வரிசையில் முண்டியடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

 எழுத படிக்க மட்டும் தெரிந்திருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையிலும் பட்டதாரிகளும் சமையல் மற்றும் துப்புரவு வேலைக்கு திரண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இரவு 8 மணிக்குப் பின்னரும் நேர்முகத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது தமிழ் செய்தி வளைதளத்துடன் இணைந்திருங்கள்  நன்றி!