ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள். அந்த வரிசையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியராக செந்தில்ராஜ் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  தற்பொழுது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த கந்தசாமி குறை தீர்ப்பு சிறப்பு அதிகாரியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் ஆக மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக இயக்குனர் மற்றும் வேளாளராக ஜெயகாந்தன் நியமிகக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக கிளாஸ்டோன் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய ஆட்சியர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.