சானிடைசர் பயன்படுத்தியபின் பட்டாசு வெடிக்கலாமா ? அரசு மருத்துவர் விளக்கம்




தீபாவளி தினத்தில் கைகளில் சனிடைசர் தடவிய பின் பட்டாசு வெடிக்கலாமா என்பது குறித்து அரசு மருத்துவர் விளக்கம் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய பிரிவு தலைமை மருத்துவர் ரமா தேவி ,

 தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அனைத்து மக்களும் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றபின் கைகளில் சானிடைசரைத் தடவிக்கொண்டு பட்டாசுகளை வெடிக்க கூடாது.

சானிடைசர்களில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அவற்றுக்கு தீப்பற்றக்கூடிய தன்மை உண்டு அதனால் பட்டாசுகளை வெடிக்கும் பொழுது சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.வெடித்து முடித்த பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.