தனியார் பள்ளி கட்டணம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!

கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களுக்கு  தற்போது ஆன்லைன்  வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

 தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ள அறிக்கை  டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை 40 சதவீத கட்டணம் மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை பிப்ரவரி மாதத்திற்குள் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்ததாக அவர் கூறியிருக்கிறார்.

 மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கல்வி கட்டணம் வசூல் செய்வது குறித்து பெற்றோர்களிடம் எந்த தனியார் பள்ளி நிர்வாகமும் வற்புறுத்தக் கூடாது எனவும், உரிய கால அவகாசம் அவர்களுக்கு கொடுக்க வேண்டுமெனவும்,கொரோனா தொற்று காரணமாக அனைவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே அவர்களை வற்புறுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.