திருச்சியில் அரசு பேருந்து பட்டபகலில் கடத்தல்! 

 

 

 

 திருச்சியில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது . மது போதையில் அரசு பேருந்தை கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் 

.கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி


  இன்று காலை அரசு பேருந்து வந்தது. இந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் கரூரில் இருந்து திருச்சி வந்த பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தில் இருந்து பயணிகளை இறக்கி விட்டதும் அங்குள்ள தேனீர் கடைக்கு அருகே பேருந்தை நிறுத்திவிட்டு உணவு சாப்பிட பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருவரும் சென்றுள்ளார்கள். சாப்பிட்டுவிட்டு பேருந்துகள் வரும் நேரத்தில் பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது அவர்கள் பார்த்துள்ளார்கள். இதனை கண்ட பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். இந்தப் பேருந்து யாரோ ஒரு மர்ம நபரால் கடத்திக் கொண்டு செல்வது உறுதி செய்துள்ளனர். 

இதனையடுத்து வழியில் வந்த நபரிடம் விஷயத்தைத் தெரிவித்து அந்த பேருந்தின் பின் தொடர்ந்து சென்று அந்தப் பேருந்தை நிறுத்தினார்கள். மேலும் பேருந்தை ஓட்டிய நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்கள்

 சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மதுபோதையில் இருந்த வரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.  பட்டப்பகலில் நடைபெற்ற இந்த பேருந்து கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நன்றி!