மாணவர்களின் வீடுகளுக்கே சென்று தீபாவளி வாழ்த்து கூறும் அரசு பள்ளி ஆசிரியர்கள்! 

 

 

 கொரோனா தொற்றின் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளதால் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று மாணவர்கள் தீபாவளி வாழ்த்து கூறி கொரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

 சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தீபாவளியை முன்னிட்டு இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு இன்று தலைமை ஆசிரியர்கள் அவர்கள் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் மாணவ மாணவிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று இலவச சீருடை, இலவச நோட்டு புத்தகம் ,மற்றும் இனிப்புகள் கொண்ட ஒரு பெட்டகத்தை வழங்கி தீபாவளி வாழ்த்துகளையும்  மாணவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

 மேலும் மாணவர்கள் கொரோனா விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை  ஒவ்வொரு மாணவர்களுக்கும் அறிவுறுத்தி ஆசிரியர்கள் செல்கிறார்கள்.

 ஆசிரியர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள். இது போன்ற பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி வளைதளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி!