நிவர் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் மின்துறை அமைச்சர் தகவல்! 

 நிவர் புயல் கரையை கடக்கும் பொழுது பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் தெரிவித்துள்ளார். தென்மேற்கு மற்றும் அருகில் உள்ள தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 740 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது புயலாக மாறி நாளை பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் கடற்கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்களின் தகவல்படி :

புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தினந்தோறும்
 செய்து வருவதாகவும் உரிய நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் பாதுகாப்புதான் முக்கியம் எனவே ஒவ்வொரு அலுவலகத்திலும் வாட்ஸ்அப் எண் கொடுக்கப்பட்டுள்ளது. மின்கம்பம் பாதிக்கப்பட்டிருந்தால் அதை புகைப்படமாக எடுத்து அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும் 1912 என்ற மின்துறைகாண ஹெல்ப்லைன் உள்ளது.இதை பொது மக்கள் 24 மணி நேரமும் பயண்படுத்தி கொள்ளலாம்  எனவும் அமைச்சர் தங்கமணி அவர்கள் தெரிவித்துள்ளார் .உடனே  உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக மழை இருக்கும் போது புயல் கரையை கடக்கும் என்றும் அந்த நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் புயல் கடந்த பிறகு  மீண்டும் எங்கெல்லாம் பாதிப்பு உள்ளது  என சரிசெய்யப்பட்டு மின்னிணைப்பு கொடுக்கப்பட்டும் என மின் துறைஅமைச்சர் திரு தங்க மணி அவர்கள் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு கருதியே இந்த மின் இணைப்பு துண்டிப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.