தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு உறுதியானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது! தமிழகத்தில் கொரோனா பொது  முடக்கத்தால் மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் 16ம் தேதி திறக்கப்பட உள்ளது. இது குறித்து அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.

 தமிழகத்தில் கொரோனா முடக்கத்தால் மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை இந்த நிலையில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுப்படி இந்த மாதம் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் 16ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இது குறித்து அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தியுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

 வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துதல் மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது .மேலும் இது போன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள நமது தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி.