மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கோரி அரசு பள்ளி மாணவி தொடுத்த வழக்கு தள்ளுபடி  

:ஏழாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கு அனுமதி கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார் .அதன்படி மருத்துவ கலந்தாய்வு சென்னையில் நடைபெற்றது.

 இதனிடையே ஏழாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து தனது மகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று அறிவழகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது ஏழாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் அனுமதிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் மதுரை கிளை.

 மேலும் அரசு பள்ளியில் முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த 7.5% சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.