கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

 இதனை அடுத்து தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளும் கல்லூரிகளும் செயல்படும் என தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருந்தார். இதனை  பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். நவம்பர் 9 இன்று அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோரிடமிருந்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

 இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 60% க்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன .வரும் 16ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப் படுமா ?அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன .மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி இணைய தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி!