முதல் கலந்தாய்வில் இடம் பிடித்த 5 அரசு பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!

  மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீ உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. கீரமங்கலம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேருக்கு முதல் நாள் கலந்தாய்வில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 இந்த கலந்தாய்வில் கீரமங்கலம் அரசு பள்ளி மாணவ மாணவிகள் 5 பேர் கலந்து கொண்டனர். அதில் கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் திவ்யா மற்றும் பிரசன்னா ஆகிய இரு மாணவிகளும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணிகா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் ,ஜீவிகா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது.

 அதேபோல் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஹரிஹரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார். .கீரமங்கலம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.