இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பு: 500 தனியார் அமைப்புகளுக்கு நிதி உதவி!


 மத்திய விளையாட்டு அமைச்சகம் தற்போது அறிவித்துள்ள இந்த திட்டத்தின் மூலம் 500 அகாடமிக்கு இரண்டாயிரத்து 20 மற்றும் 21 ஆம் நிதியாண்டுக்கான  நிதி ஆதரவு வழங்கும் வகையிலான ஊக்குவிப்பு அமைப்பு முதன் முதலாக
மத்திய விளையாட்டு அமைச்சகம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 

பல தனியார் பயிற்சிஅகாடமி இந்தியாவில் செயல்பட்டு வரும் நிலையில் இந்த அகாடமியில் பயிற்சி அளிக்கும் வீரர்களின் தரமான  விளையாட்டுகள் மற்றும் துணை கட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு அறிவியல் பணியாளர்களின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு பிரிவாக பிரிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி 14 முன்னுரிமை விளையாட்டுக்கள் அடையாளம் காணப்படும். இது திறன்மிக்க வீரர்களை கொண்ட  அகாடமிகள் ஆதரவை பெறுவதற்கு தகுதியானவை என்றும் இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து தெரிவித்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இத்தகைய நிறுவனங்களுக்கு அரசு ஆதரவு கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமான செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஆதரவுகள் இருந்தால் தான் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் விளையாட்டுத் திறன் வளர்ச்சி பெற முடியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான சிறிய அகாடமி விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

 இந்த அகாடமிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உதவிகள் அளித்து வந்தால் தான் சிறந்த முறையில் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .அகாடமிகள் கட்டமைப்பு, விளையாட்டு, அறிவியல் ஆதாரம் இருந்தால் மட்டுமே தரம் வாய்ந்த வீரர்கள் தரமான பயிற்சி பெற முடியும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 அரசின் இந்த முடிவு பல்வேறு பயிற்சியாளர்கள் வரவேற்றுள்ளார்கள்.அகாடமிகளுக்கு இது பெரிய ஊக்கத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்கள் நன்றி.!