5 கிலோ கொண்டைக்கடலை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசாணை வெளியீடு!

  பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணமாக கொண்டகடலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழகத்திலும்  தீவிரமடைந்து பின்பு சற்று குறைந்துள்ளது.

 கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குறைவான பாதிப்பு உள்ள பகுதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  இருப்பினும் சில வகை தொழில் செய்பவர்  பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 இதனால் பொது மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் நிவாரணம் ஏற்கனவே வழங்கியது. இந்த நிலையில் ஒவ்வொரு குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பத்தினருக்கும் தலா 5 கிலோ  கொண்டை கடலை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.ஶ்ரீ இது  ஜூலை மாதம் முதல் ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படும் என இந்த அரசானையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.