வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்: 

சட்டமன்ற தேர்தலுக்கு வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது தமிழகத்தில் அடுத்து நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். காட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிகளை மும்முரமாக செய்து கொண்டு வருகிறது முதற்கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு அதற்கான அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார் 

.இந்த நிலையில் 2021 தேர்தலை ஒட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகா அவர்கள் வெளியிட்டார். 

வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள இன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் திருத்தம் செய்ய நவம்பர் 21 மற்றும் 22 டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பெயர் சேர்ப்பு நீக்கம் திருத்தம் செய்யப்பட்டு  ஜனவரி20ல் இறுதி பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.