அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்( செப்டம்பர் மாதம் 26ஆம் தேதியன்று).

செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் திரு சண்முகம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

 இது குறித்து அனைத்து துறை செயலாளர்களுக்கு தாம் கடிதம் எழுதி உள்ளதாகவும் வரும் 26-ஆம் தேதி அங்கீகரிக்கப்படாத சில சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் அனைத்து அரசு ஊழியர்களும் கண்டிப்பாக  பணிக்கு வர வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

.வரும் 26ம் தேதி பணிக்கு வராத ஊழியர்களுக்கு அன்றைய தினத்துக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து துறைகளிலும் அன்றைய தினம் வந்தவர்களின் விவரங்களை சேகரித்து வழங்கவும் தலைமைச் செயலாளர் திரு சண்முகம் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நன்றி