சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 25!

 சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 25ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி அவர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

 தமிழக அரசு சார்பில் ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் தொண்டு செய்யும் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களது முழு  விவரத்துடன் விண்ணப்பிக்கலாம்.

 இதற்கான இணையதள முகவரி www.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு மகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.  அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

 விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் மாதம் 25ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது .தகுதி உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.