தமிழகம் - கர்நாடக இடையே வரும் 16-ம் தேதிக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுமா? முதலமைச்சர் அறிவிப்பு.




தீபாவளியையொட்டி தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே வரும் 16-ஆம் தேதிக்கு பிறகு இருந்து இயக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 25.03.2020 முதல் இன்று வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. 


அதில் குருநாத் தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனவே தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பொது மக்களின் வேண்டுகோளினை ஏற்று முதல் 16.11.2020 வரை கர்நாடகாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே புது பேருந்து போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கர்நாடக மாநில முதலமைச்சர் அவர்கள் கர்நாடக மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தை தடையின்றி தொடர்ந்து இயக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இக்கோரிக்கையை கருத்தில்கொண்டு பணி நிமித்தமாக பொதுமக்கள் சென்று வர ஏதுவாக 16. 11. 2020 இக்கு பின்னரும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவையை தொடர்ந்து இயக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.