தமிழகத்தில் 10 , 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா? கல்வி அமைச்சர் விளக்கம்!  

 கொரோனா வின் தாக்கத்தால் கடந்த சில மாதங்களாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால் 9 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது. 

இந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 சதவீதத்தில் இருந்து பொதுத்தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது .தற்போது இந்த முறையும் பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது

 .இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் தமிழகத்தில் வரும் 2021 ஆம் கல்வி ஆண்டில் 10 ,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.நன்றி.