10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கவனத்திற்கு.. 10, 11, 12 ஆகிய பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத சூழ்நிலை யில் ஆன்லைன் வழியாகவே பாடம் நடத்தப் படும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகல்வித்துறை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது .

அதன்படி பத்தாம் வகுப்பு பதினோராம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கல்வி தொலைகாட்சியில் நடத்தப்படும் முக்கிய தலைப்புகளை மட்டும் ஆழமாக படிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.