பெருமை தரும் முன்னேற்றம்

விண்ணில் வெற்றிச்  சரித்திரம்

மிகப்பெரும் எடை கொண்ட செயற்கைக் கோளை, சமீபத்தில், 'இஸ்ரோ' அபாரமாக விண்வெளியில் செலுத்தியது பெருமைக்குரியது. ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, 31 செயற்கை கோள்களுடன், வெற்றிப் பயணம் மேற்கொண்ட, 'பி.எஸ். எல்.வி., - சி38' பயணம், தொடர் வெற்றியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வெற்றிப்பாதை அணிவகுப்பில், 'இஸ்ரோ' இம்முறை அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்வெளியில் அனுப்பியுள்ளது.மிகவும் கனமான ராக்கெட் என்பதை விட, இதற்கான, 'கிரையோஜெனிக்' தொழிற்நுட்பம், நம் விஞ்ஞானிகளால் மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி ஆய்வில் மேலை நாடுகளின் ஆய்வுக் கருத்துகள் ஆதாரமாக, ஒரு பக்கம் இருந்த போதும், இத்தொழில் நுட்பத்தை நமக்கு தர மறுத்த நாடுகள் இன்று நம்மை வியந்து பாராட்டுகின்ற அளவிற்கு முன்னேற்றமடைந்துள்ளது. 'இஸ்ரோ' டைரக்டர் கிரண்குமார் மற்றும் விஞ்ஞானிகள், இத்தொழிற்நுட்பத்தை பல ஆண்டுகளாக சிறுகச் சிறுக மேம்படுத்தி, இன்று சரித்திர சாதனை படைத்தனர் என்பதில் ஆச்சர்யமில்லை. அப்பணிக்கு தேவைப்பட்ட நிதியை, மத்திய அரசு வழங்கி ஊக்குவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொழில் நுட்பத்தில், நம் நாடு மேம்பட விஞ்ஞானி சாராபாய், டாக்டர் அப்துல் கலாம் போன்ற பலர் வரிசையாக மேற்கொண்ட முயற்சிகள் எண்ணிலடங்காதவையாகும். அதைவிட, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ஆகும் செலவினத்தை விட இது குறைவு என்பதால், இம்மாதிரி செயற்கைக் கோளை ஏவ, பல நாடுகள் நம் உதவியை நாடலாம் என்று அறிவித்துள்ளது. அதற்கு நாம் இன்னமும் அமெரிக்கா, ரஷ்யா போல, இத்துறையில் அதிக தொழில் நுட்பங்களை அதிகரித்துக்கொள்ளவேண்டும்.

தற்போது அனுப்பப்பட்ட, 31 செயற்கைக் கோள்களில், தக்கலை அருகே குமாரகோவிலில் விலில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர் உருவாக்கிய மிகச்சிறிய செயற்கைக் கோளும் அடங்கும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின், 'நானோ' என்ற சிறிய ரக செயற்கைக்கோள்களும் இதில் அடங்கியுள்ளன.இந்த செயற்கைகோள் மூலம் நகர, ஊரக மேம்பாட்டு திட்டங்கள் சிறப்படையும். சாலைப் போக்குவரத்து, குடிநீர் வினியோகம், கடலோரப் பகுதிகளில் பயன்பாடு மற்றும் கண்காணிப்பு என்று பல தகவல்களை அறிந்துக்கொள்ள வேண்டும்.சுற்றுச்சூழல் பாதிப்பு, அதிக மாசு உருவாக்கும் செயல்கள், அதே சமயம் வறட்சி அல்லது இயற்கைச் சீற்றங்களை கண்டறிய, விஞ்ஞான அடிப்படையில் தகவல்களை சேகரிக்க முடியும். நகர்ப்புற கட்டமைப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கான அடிப்படைத் தகவல்கள், நம் பன்முக வளர்ச்சிக்கு அவசியமானது. அத்தோடு, நாம் அணி சேர்ந்திருக்கும் கூட்டமைப்பான, 'சார்க்' நாடுகளிடமிருந்து ஓரளவு எளிதாக இயற்கை வளங்கள் குறித்த தகவல்களை பெற முடியும். மிகக் கனமான ராக்கெட்டை ஏவி, அது குறிப்பிட்ட விண்வெளி சுற்றுப்பயணத்தில், திட்டமிட்டபடி செயற்கைக்கோள் பிரிந்து பணியாற்றுவது என்பது, அவ்வளவு சுலபமான பணி அல்ல. விண்ணில் செலுத்தப்படும் எப்பொருளும், 'ஏரோடைனமிக்ஸ்' என்ற அடிப்படையில், சிறிது தவறு நிகழ்ந்தாலும் இப்பணி, தோற்றுப் போக வாய்ப்புள்ளது. ஆகவே, விண்வெளிப் பாதையில் செல்ல, அதிக கவனத்துடன் உருவாக்கப்பட்டதால், இந்தப் பயணம் எளிதாக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் சிறப்பம்சமாகும்.இப்பணியின் வெற்றிக்கு அடையாளமாக, பூமிக்கு மேற்பரப்பில், 500 கி.மீ., தொலைவில் உள்ள செயற்கைக்கோள் எடுத்தனுப்பிய படங்கள் மிகத் துல்லியமாக உள்ளன.'இஸ்ரோ' தலைவர் கிரண்குமார் கூறும் போது, '2014ம் ஆண்டு முதல் இப்பயணம் வரை, 200க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்து கடைசியாக வெற்றி கிட்டியிருக்கிறது' என்றிருக்கிறார்.

அத்துடன் இம்முயற்சியை அடுத்து, தென் அமெரிக்காவில் உள்ள, 'கொரு' விண்வெளி தளத்தில் இருந்து, 'ஜிசாட் - 17' ஏவப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, விண்வெளியில் செயல்படும், 17 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களுடன் இதில் அனுப்பப்பட்ட, செயற்கைக்கோள்கள் இணைந்து செயல்படும். இந்தியாவின் விண்வெளி ஆய்வு திறன் படிப்படியாக முன்னேறி வளர்ந்த நாடுகளின் திறமைக்கு ஒப்ப வளர்வதை இவை காட்டுகின்றன. மேலும், இத்துறை நவீனமயமாக்கப்படும் என்ற தகவல், நம் விஞ்ஞானிகளின் அபரிமித உழைப்பின் அடையாளமாகும்.

சரித்திரம் படைக்கிறது சந்திராயன் 2

                ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இஸ்ரோவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 22ஆம் தேதி ஜிஎஸ்எல்வி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. முதலில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்து, பிறகு பூமி சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு மாறியது. தற்போது முழுவதுமாக நிலவினை நெருங்கிவிட்டது சந்திராயன் 2. இந்த சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து, விக்ரம் எனும் பெயரிடப்பட்ட லேண்டர் பிரிக்கப்பட்டு நிலவினில் தரையிறக்கப்படுகிறது. பின்னர் இந்த லேண்டரில் இருந்து பிரக்யான் எனும் பெயரிடப்பட்ட சாதனம் மூலம் நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளது.இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக நடைபெற உள்ளது. இதனை இணையதளவாசிகள் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடிவருகின்றனர்.

அவமானங்களை தவிர்த்து வானில் பறந்த இந்தியா :

இஸ்ரோவின் இந்திய ராக்கெட் விண்ணில் உயர உயர பறந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த வரலாற்று சாதனைக்கும், சரித்திர வெற்றிக்கு பின் இருக்கும் ஒரு நாட்டின் பச்சை துரோகங்களையும் அதனால் இந்தியா அடைந்த அவமானத்தை துடைத்தெறிந்த இஸ்ரோவின் 25 வருட அயராத உழைப்பையும் நாம் தெரிந்து கொண்டே தான் ஆகவேண்டும்.

1991 ஆம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் இஸ்ரோவிற்கும் ரஷ்யா கிளாவ்கோஸ்மோஸ் ஏஜென்சிக்கும் 230 கோடிக்கு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, ஒப்பந்தத்தின் படி 7 கிரையோஜெனிக் எஞ்சின்கள் மற்றும் எஞ்சின்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் இந்தியாவிற்கு கற்று தர ரஷ்யா ஒப்புக்கொண்டது.

இதற்க்கு மேலும் தாமதித்தால்  விண்ணில் சீறி கிளம்பி விடுவான் இந்தியா என கொதித்து போன அமெரிக்கா, உடனடியாக  ரஸ்யாவின் கைகளை கட்டிப் போட்டு இந்தியாவின் முதுகில் குத்த ஆயத்தமானது, இந்த துரோகத்தை செய்வதற்காக அடுத்த ஆறுவருடங்களுக்கு அமெரிக்காவின் ராக்கெட்களை ஏவும் 60-70 மில்லியன் ஒப்பந்தத்தை ரஷ்யாவிற்கு தாரை வார்த்தது அமெரிக்கா.

ஒவ்வொரு இந்திய ராக்கெட் விண்ணில் பாயும் பொழுதெல்லாம் அது வெறும் செயற்கை கோள்களை மட்டும் சுமந்து செல்வதில்லை, நட்பு நாடுகள் நம் உழைப்பின் மீது வைக்கும் நம்பிக்கையையும், உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் பெயரை உயர்த்தி பிடித்து கொண்டே தான் இவை உயர உயர செல்கின்றன, அதற்கு என்றும் அணையா எரிபொருளே எதிரி நாடுகள் தந்த துரோகமும் அவமானங்களும் தான்.