மேட்டூர் அணையும் முட்டல் அருவியும்


ஆத்தூர் இயற்கை எழில் மிகு முட்டல் அருவியின் ஓர் அழகிய பயணம்

ஆத்தூர் முல்லை வாடி பகுதி  சாலையில் பதினைந்து  கிலோ மீட்டர்  தூரத்தில் முட்டல் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் ஆணைவாரி என்றொரு  பகுதியில் இந்த எழில் மிகு அருவி காட்சியளிக்கிறது. இந்த எழில் மிகு ஆத்தூர் முட்டல் அருவியில் அதிக அளவில்  நீர் கொட்டுவதாலும், வனத்துறையினரின்  சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளாலும், அதிக அளவில் சுற்றுலா பயணிகளையும் பல பறவை இனங்களளையும்   ஈர்க்கின்றது. தமிழ்நாடு வனத்துறையினர் இந்த எழில் மிகு ஆத்தூர் முல்லை வாடி முட்டல்  அருவி பகுதியை ஒரு சிறந்த சுற்றுலா தளமாக புனரமைத்து மேம்படுத்தி இந்த எழில் மிகு அருவியின் சுற்று பகுதிகளையும் சிறந்த மற்றும் பாதுகாப்பான முறையில் பராமரித்து வருகிறது.

ஆத்தூர் எழில் மிகு முட்டல் அருவியின் இயற்கை படகு பயணம்

தமிழ் நாடு அரசு வனத்துறை எழில் மிகு ஆத்தூர் முல்லை வாடி ஏரியிலிருந்து நீர் முட்டல் அருவிக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தியுள்ளது . படகு பயணத்தின் போது, உயிர்காக்கும் கவச உடைகள் வனத்துறையினரால் வழங்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்கள் எடுக்கப்பட்டிருப்பதுடன், குழந்தைகளுக்கு  கட்டணமாக ரூபாய் - 10 மற்றும் பெரியவர்களுக்கு   ரூபாய் - 20 உம் வசூல் செய்ய பட்டு வருகிறது .

எழில் மிகு இயற்கை ஆத்தூர் ஆணைவாரி அருவியின் தோற்றம்

கல்வராயன் மலையை சேர்ந்த பகுதிகள் தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைக் காலங்களில்  நல்ல மழை பொழிவைப் பெருகின்றன. இந்த மழை நீர் வழிந்தோடி எழில் மிகு ஆத்தூர் ஆணைவாரி அருவியில் விழுந்து அருகில் உள்ள முட்டல் கிராம ஏரியில் சேருகிறது. இந்த எழில் மிகு ஏரியில் சுற்றலா பயணிகளின் வசதிக்காக பாதுகாப்பு அம்சங்களுடன்   படகு சவாரி வசதிகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாடு அரசு வனத்துறையினரால் எழில் மிகு ஆத்தூர் முல்லை வாடி ஏரியின் கரை அருகிலேயே தங்கும் அறைகள் கட்டப்பட்டு பாதுகாப்பு அம்சங்களுடன் சுற்றுலா பயணிகளுக்கு நியாமான வாடகைக்கு வழங்கப்படுகிறது.

மேட்டூர் அணை ஓர் வரலாறு பயணம்

சேலம் மாவட்டம் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் என்னும் ஊரில்  மேட்டூர் அணை 1925 - ஆம் ஆண்டு துவங்கி  1934 - ஆம் ஆண்டு Colonel W.M Ellis அவர்களின் வடிவமைப்பின் படி ரூபாய் 4.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த மேட்டூர் அணை கட்டப்பட்ட சமயத்தில் இது தான் உலகிலேயே உயரமான நேர் கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாகும்(டேம்). மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சுமார் 16.05 இலட்சதிற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேட்டூர் அணை  பல மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர்,  தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பயன் பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்து பயன் படுத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்ட மேட்டூர் நீர் தேக்கதிலிருந்து ( டேம் )  தண்ணீர் திறகும் போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாடிற்கும் அதிகமாக மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாடிற்கும் அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூர் நீர் தேக்கம் ( டேம் )  கட்டி முடிக்க பட்டு 83  ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக நீர்தேக்கம் ( டேம் ) நீர் பரப்பு பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் மாண்பு மிகு தமிழ் நாடு முதலமைச்சர் ( Chief Minister ) அவர்களால் 28-05-2017 ஆம் தினம் அன்று துவக்கப் பட்டது .  அதனால்  விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகத்தின் மிகப்பெரிய நீர் தேக்கமாக உள்ள மேட்டூர் அணை நீர்தேக்கம், அது கட்டி முடிக்கப் படும் வரை ஆசியாவின் மிக உயரமான அணையாகவும், உலகிலேயே பெரிய நீர் தேக்கமாக இருந்தது. 1801 - ஆம் ஆண்டு முதல் 1923 - ஆம் ஆண்டு வரை மைசூர் சமஸ்தானம் முட்டுக் கட்டை போட்டு வந்ததால் மேட்டூரில் அணை நீர்தேக்கம் ( டேம் ) கட்டுவதற்கான ஆங்கில அரசின் முயற்சி கைவிடப்பட்டு வந்தது.


மேட்டூர் அணையின் நீரியியல் விவரம் (Hydrological details)

அணையின் கொள்ளளவு ( capacity )  - 93.47 tmc ft.

மேட்டூர் அணையின் மொத்த நீளம் - 5300 feet

அணையின் அதிக பட்ச உயரம் - 214 feet

அட்ச ரேகை (Latitude) - 11’  48’  11’’ North

தீர்க்க ரேகை  (Longitude) -  77’  48’ East

அணையின் மேல் பகுதி (அகலம்) - 20 feet 5 inches

அணையின் அதிக பட்ச அகலம் - 171 feet

அதிக பட்ச நீர்த் தேக்கும் உயரம் - 165 feet