File:Women at farmers rally, Bhopal, India, Nov 2005.jpg ...

பொருளாதாரமும் பெண் முன்னேற்றமும்

பெண் முன்னேற்றம் பற்றிய பொருளாதாரக் கருத்துக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு உரிய தடைகளுள் ஒன்றாக இருப்பது பெண்களுக்குப் பொருளாதார விடுதலையேயாகும் பெண்களுக்குப் பொருளாதார விடுதலையைத்தந்து அவர்களை முன்னேற்றுவது அவசியமாகும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு, உழைப்பு, ஊதியம் முதலிய பொருளியல் கோட்பாடுகளில் சமத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பெண்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

பெண் என்பவள் முதலில் பொரளாதாரம் பெற்றவளாக மாற வேண்டும் நீங்கள் உங்கள் கணவனை இன்னும் சகாவாக ஏற்கவில்லை ஒன்று பணிகிறீர்கள் அல்லது பணியச் செய்கிறீர்கள் தோழமையுணர்வு உங்களிடமும் இல்லை நீங்கள் உங்கள் சொந்தக் காலில் நிற்க உங்கள் பொருளாதாரத் தேவைகளை உங்களாலேயே சமாளித்துக் கொள்ளும் நிலையை எய்தினீர்களா? இல்லை இன்னும் நீங்கள் தாய் மனைவி மகள் சகோதரி என்கிற நிலையினின்றும் நீங்கி மனுசி என்கிற நிலையை எய்தினீர்களா ? இல்லை தாய்க்குலம் என்றால் கை தட்டுகிறீர்கள்".

இதில் பெண்ணுக்குச் சுதந்திரம் உண்மையாகக் கிடைக்க வேண்டுமானால் பெண் என்பவள் பெண்ணாக மட்டும் கருதும் நிலை அறவே மாறி, அவளை ஒரு மனுசி என்று மதிக்கும் நிலை வர வேண்டும் ஆணுக்குப் பெண் தாயாய், மனைவியாய், மகளாய், சகோதரியாய் இருப்பதை விட அவள் ஆணுக்குச் சமமாக மனுசியாக வர வேண்டும் என்ற உணர்வை எடுத்துக்கூறிப் பெண்கள் சொந்தக் காலில் நிற்கும் பொருளியல் உரிமையைப் பெற வேண்டும் என்ற கருத்து வெளிப்படுத்துவதை அறியலாம். பெண்கள் சமுதாயத்தில் தனித்து நிற்கும் ஆற்றலைப் பெற வேண்டும். பெண்கள் கல்வி கற்றுப் பொருளீட்டும் பணிகளில் கட்டாயம் ஈடுபடவேண்டும்.

தங்கள் கல்விக்கு ஏற்பவும் திறனுக்கு ஏற்பவும் அரசுப் பணிகள் ( அ ) வணிகத் தொழில்களை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் ஆண்களைச் சார்ந்து வாழும் அடிமைச் சமத்துவத்தை அளிக்க முடியும். குடும்ப அமைப்பில் பெண், ஆணைச் சார்ந்து வாழும் நிலை உள்ளது, ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் விளங்க வேண்டுமானால் ஆண்களைப் போல பெண்களும் பொருளாதார உரிமைகளைப் பெற வேண்டும். ஆணின் பொருளாதாரத்தைச் சார்ந்து வாழும் பெண்ணுக்கு, அதை மீறி வெளிவரப் பொருளாதாரம் தேவையாகிறது. எனவே, பெண்ணியக் கோட்பாட்டாளர்கள் “பொருள் முதல் வகிதக் கோட்பாடு பெண்ணின் பணியை இணைத்துப் பார்க்கப் பட வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். "பெண்கள் ஏதாவதொரு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லோரும் ஏதாவதொரு வேலை பார்க்க வேண்டும் என்றும், குறிப்பாகப் பெண்கள் வீட்டில் சும்மா இருக்கக் கூடாதென்றும், அவர்களும் தங்கள் வருவாயைத் தயாரித்துக் கொள்ள கைத்தொழில்களைக் கற்க வேண்டுமென்றும்,
அதன் மூலம் சுயமாக நிற்க வேண்டுமென்றும் பெண்களுக்கான வேலை வாய்ப்புக்களை அடிப்படை உரிமையாக்க விரும்பும் பலர் அரசின் உதவியில்லாத சூழ்நிலையில் பெண்கள் தங்களுக்குத் தாங்களே சுய தொழிலை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார்கள். பெண்கள் படித்துவிட்டு அரசுவேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை தனியாகவோ ( அ ) கூட்டமாகவோ ஏதேனும் ஒரு தொழில் தொடங்கி நடத்தலாம் என்ற கருத்தினைக்' கனவு மெய்ப் பட வேண்டும் ' வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையான மூலத்தைக் கூட்டுறவு முறையிலும் ஏற்படுத்தலாம்.

பெண் பற்றிய பொருளாதாரம் தனி மனிதப் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகள் என்றே கூறலாம். வாழ்க்கைக்குப் பொருள் ஆதாரமாக இருப்பதால் நேர்மையான உழைப்பின் மூலம் பொருளீட்ட வாய்ப்பில்லாத சூழ்நிலையில் வேறு மூலதனமற்ற பெண்கள் தங்கள் உடலை விற்று வாழ்க்கையை நடத்தத் துணிகின்றனர்.  வறுமையின் சூழலால் தவறும் பெண்களுக்குத் தக்க மூலதனமும் வேலை வாய்ப்பின்மையுமே காரணமாகின்றது. "வறுமையே பெண்களின் பிரதான எதிரியாக இருப்பதால் பெண்கள் முன்னேற முடிவதில்லை என்ற முடிவினை அரசு சாரா அமைப்புகள் நடத்திய மாநாட்டின் தீர்மானம் கூறுகிறது. ”அரசு அறிக்கையும் கிட்டத் தட்ட இதே கருத்தைத் தான் தெரிவிக்கிறது. "குடும்பத்தில் பெண்களின் உழைப்பை போற்றுவதில்லை அவர்களின் உழைப்பிற்கு ஊதியம் வழங்குவதில்லை. பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் தருவது இல்லை "இது ஒரு வகையான உழைப்புச் சுரண்டல் எனப் பெண்ணியலார் கூறுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் சில நேரம் சில பெண்கள் தவறான வாழ்க்கையில் ஈடுபட நேர்கின்றனர் இதற்குப் பெண்களை நல்வழிப் படுத்தி, வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைப் பிரபஞ்சன் பெண் பற்றிய பொருளாதாரக் கருத்துக்களுள் ஒன்றாய் வைத்துள்ளார்.“ தன்னை எல்லாத் தளைகளிலிருந்து விடுவிடுத்துக் கொள்ளும் பெண், ஆணுக்கு இணையான உண்மையான சமத்துவத்தை அடைவதற்குச் சமூகப் பொருளாதாரத்தில் தன்னை விடுவித்துக் கொள்வதும் பொது உற்பத்தித் திறனில் பங்கு பெறுவதும் அவசியமாகும்" என்பது பெண்ணிய நுாலார் கருத்தாக வெளியிட்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. வேலை வாய்ப்புகள் குறையும் போது பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே ஆவர். பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் அடைய வேண்டும் என்றால் வேலை வாய்ப்புகள் பெண்களுக்கு அமைய வேண்டும்.

பெண்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்தால் பெண்களிடையே வறுமை அதிகரிக்கும். ஆகவே பெண்களுக்குத் தக்க பொருளாதாரச் சூழலை உருவாக்குவதன் மூலமே பெண்கள் சுதந்திரத்தை முழுமையாகப் பெற முடியும் என்ற தீர்க்கமான முடிவை விரிவாகக் விளக்கியுள்ளனர். ஏற்றத் தாழ்வின்மை நாட்டில் சமத்துவம் பரவ வேண்டும், எல்லோர்க்கும் எல்லாம் என்ற நிலை உருவாக வேண்டும் உருவாக வேண்டும்.