India-In-World-Science

உலக அரங்கில் இந்தியா

ஆராய்ச்சியை சந்தையில் வாங்க முடியாது

இந்தியாவோடு இதில் போட்டி போடும் பிற நாடுகள்:-

எத்தியோப்பியா 30.8
நேபாளம் 20
சூடான் 20.9
தான்சானியா 20.9
ருவாண்டா 23
கம்போடியா 20.9
உகாண்டா 14.8
இலங்கை 13.7
சீனா 5.7
கியூபா <5

இந்தியாவின் வறுமை நிலை

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள மக்களின் எண்ணிக்கை 37 சதவீதம், கிராமப்புறங்களில் 22% பேரும் நகர்ப்புறங்களில் 15% பேரும் இருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு $1.25 சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் 41.6%, ஐநா வின் வறுமை பட்டியலில் நாம் 88வது இடத்தில் இருக்கிறோம்.

இந்திய மக்களின் மருத்துவ வசதிகள்
இந்தியாவில் மலேரியா காய்ச்சலால் வருடத்திற்கு 1,25,000 பேர் இறந்து கொண்டு இருப்பதாக, The Lancet என்ற மருத்துவ இதழின் ஆய்வறிக்கை கூறுகின்றது, ஐநா வின் திட்டப்படி உலகம் முழுவதிலும் 1,00,000 பேர் இறக்கின்றனர் என்ற கூற்றை விட இந்தியாவில் அதிகமாக இறக்கிறார்கள். இந்த நோயால் மரணிப்பதை தடுக்கமுடியும்.
காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வளரும் நாடுகளில் உள்ள விகிதத்தை விட இந்தியாவில் அதிகம் இந்தியாவில் ஒரு இலட்சம் பேருக்கு 23 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர் / மரணிக்கின்றனர்.


வறுமை நிலைமை மற்ற ஏழை நாடுகளின் முயற்சி ...
இலங்கை யில் 10 பேரும்,
நேபாளத்தில 22 பேரும்,
சீனாவில் 12 பேரும்,
கென்யாவில் 19 பேரும்,
கினியா-பிசோவில் 25 பேரும்,
உகாண்டாவில் 27 பேரும்,
பாகிஸ்தானில் 39 பேரும் இறக்கின்றனர்.

குழந்தைகள் மரணம்

குழந்தைகள் பிறந்த உடனே சரியான மருத்துவ வசதி, சத்துள்ள உணவு கிடைக்காமல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்தியாவில் மரணமடைவது அதிகமாக உள்ளது. (மரணவிகிதம் /1000 குழந்தைகள் பிறக்கும்போது)
இந்தியாவில் 69
பங்களாதேஷில் 54
நேபாளத்தில் 51
எரித்ரியாவில் 51
கானா வில் 76
பாகிஸ்தானில் 89
சூடானில் 200
இலங்கை 17
சீனாவில் 21 குழந்தைகளும் இறக்கின்றனர்.

அதே போல் ஐந்து வயதிட்குட்ட  எடை குறைவாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை

இந்தியாவில் 43.5%
பங்களாதேஷில் 41.3%
நேபாளத்தில் 38%
எத்தியோப்பியாவில் 34.6%
சூடானில் 31.7%
சோமாலியாவில் 32.8
நைஜீரியாவில் 37.9%
இலங்கையில் 21.1%
வடகொரியாவில் -20.6%
சீனாவில் 6.8%
ருவாண்டா 18%
கியூபாவில் 3.9%

குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் வளர்ந்த நாடுகளோடு போட்டியிடும் நாம் மக்கள் நலனில் உள்நாட்டுக் கலவரங்களாலும், பஞ்சத்தாலும் அவதிப்படும் நாடுகளைவிட கீழேயுள்ளோம்.

கழிவரை பயன்பாடு
இந்தியாவில் கழிவறையைப் பயன்படுத்துகின்ற மக்கள் எண்ணிக்கையை விட செல்போனை உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஐ நா சபை கூறுகிறது. வளர்ந்த நாடுகளில் 100 சதவீத மக்கள் சுகாதரமான கழிவறையை உபயோகப்படுத்தும் போது இந்தியாவில் 31சதவீத மக்களே சுகாதரமானக் கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள்.

கழிவறை பயன்பாடு -நாடுகளின் அடிப்படையில்...
அமெரிக்காவில் 100%, இலங்கையில் 91%, சீனாவில் 55%, பங்களாதேஷில் 53%, பிரேசிலில் 80%, உகாண்டாவில் 48%, ருவாண்டாவில் 54%, நேபாளத்தில் 31% பேரும் சுகாதாரமான கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை 10,000 பேருக்கு 6 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.
அமெரிக்காவில் 27 மருத்துவர்களும்
கியூபாவில் 64 மருத்துவர்களும்
எகிப்தில் 25 மருத்துவர்களும்
சீனாவில் 14 மருத்துவர்களும்
பாகிஸ்தானில் 8 மருத்துவர்களும்
ஜமைக்காவில் 9 மருத்துவர்களும்
ரஷ்யாவில் 43 மருத்துவர்களும் உள்ளனர்.

இந்தியா மருத்துவம் மற்றும் சுகாதார நலன்களுக்கு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP) 4.1% மட்டுமே ஒதுக்குகிறது. மற்ற நாடுகள் சுகாதரத்துறைக்கு ஒதுக்கும் GDP யின் அளவைக் காண்போம்.

அமெரிக்கா 15.7%
கியூபா 10.4%
சீனா 4.3%
கனடா 10.1%
பிரேசில் 8.4%
கானா 8.3%
நேபாளம் 5.1%
உகாண்டா 6.3%
பாகிஸ்தான் 2.7%
ரஷ்யா 5.4% அளவிற்கு ஒதுக்குகிறது.

அறிவியல் அடிப்படையில்..

இந்தியா விண்வெளியிலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறியுள்ளது, ஆனால் ‘ஆம் ஆத்மி’ யைப் பற்றிய அக்கறை ஆள்வோருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இந்த தகவல்கள் யாவும்  ஐ.நா.வின் ஆய்வறிக்கையிலிருந்து பெறப்பட்டவை.

ஆராய்ச்சியை சந்தையில் வாங்க முடியாது - என்.சிவசுப்ரமணியன், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி, மதுரை: 

இந்தியா, தகவல் தொழில் நுட்பத்தில் முன்னேறியுள்ளது. ஆனால் அறிவியல் துறையில் அணு மற்றும் விண்வெளி துறையில், இன்னும் பெரிய இடத்தை நோக்கி செல்லவில்லை. மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய மாணவர்கள் அறிவியலில் ஈடுபடுவது குறைவு தான். ஐ.டி., துறையை தான் அதிகம் விரும்புகின்றனர். அறிவியலைப் பொறுத்தவரை, கற்றுத்தரும் ஆசிரியர்களும் கற்பிக்கும் பாடங்களும் ஒத்துப் போக வேண்டும். மாணவர்களுக்கு புரியும் வகையில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். பாடத்திட்டத்திலும் பெரிய மாற்றம் வரவேண்டும். பள்ளிகளில், கல்லூரிகளில் ஆய்வகங்கள் பெயருக்குத் தான் இருக்கின்றன. நவீன கருவிகள், அதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. பள்ளி நிர்வாகங்களும் அறிவியலுக்கு தருவதில்லை. இலவச பாடப்புத்தகம், சைக்கிள், "லேப்டாப்' வழங்கும் அரசு, அறிவியலை வளர்ப்பதற்கான நிதியுதவியை, உள்கட்டமைப்பை செய்ய வேண்டும். விஞ்ஞான புத்தகம், கருவிகள், பரிசோதனை முறைகள் இருந்தாலும், ஆராய்ச்சியை, சந்தையில் போய் வாங்க முடியாது. பள்ளி, கல்லூரிகளில் படிப்பிற்கும், ஆய்வகத்திற்கும் சமமான நேரம் ஒதுக்க வேண்டும். அறிவியல் கண்காட்சி நடத்தும் போது, பெற்றோர், பிள்ளைகளுக்கு "மாதிரிகளை' செய்து தரக்கூடாது. இதனால் பிள்ளைகளின் அறிவியல் ஆர்வம், சிந்தனைத் திறன் குறைந்து விடும். அறிவியல் ஆய்வகங்கள், நவீன உபகரணங்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து, மாணவர்களை அறிவியலை நோக்கி ஈர்க்க வேண்டும், அறிவியலை வளர்க்க பாடுபட வேண்டும்.