விண்ணில் வெற்றி சரித்திரம்  - தனி ஒருவனாய் எலான் மஸ்க்

நாசா  கண்டுபிடித்த உண்மை என உலகமே சமூக வலைதளங்களில் கதரிக் கொண்டிருக்க நாசாவையே கதர வைக்கிறான் தனிஒருவன். விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற வல்லரசு நாடுகள் போட்டிப்போட்டு ராக்கெட்கள் அனுப்பிக் கொண்டிருக்க தனி ஒருவனாய் ராக்கெட்களை பேக்கட் செய்தவன் அவன். செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டவன் அவன்.  கனவு காண்பதில் கலாமிற்கு தாத்தாவான அவன் பெயர் எலான்.

SpaceX, Tesla போன்ற நிறுவனங்களின் CEO-ஆன எலான் மஸ்க் உலக இளைஞர்களின் நாயகன். 2001ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Paypal-இன் அதிகார நிர்வாகியாக இருந்தார் எலான் மஸ்க். அவரது அதிரடி நடவடிக்கைகள் பிடிக்காதா பார்ட்னர்கள் பொறுப்பில் இருந்து அவரை நீக்கிவிட்டார்கள். எலான் மஸ்க் ஏமாந்து விட்டார்,  ஆனால் அசரவில்லை தன்னிடமிருந்த பணத்தைக் கொண்டு Paypal-இன் பெரும்பாலான பங்குகளை வாங்கிக்கொண்டார்.  வழக்கமாக இந்த மாதிரி பங்குகளை கைப்பற்றி கொள்பவர்கள் அடுத்ததாக நிறுவனத்தை கைப்பற்றுவார்கள்.

எலானின் அதிரடிகாக எல்லோரும் காத்துக் கொண்டிருக்க அவரோ ரஷ்ய விண்வெளி விஞ்ஞானிகளை சந்திக்க நேரம் கேட்டு காத்துக்கொண்டிருந்தார்.  ஏனெனில் அவரது சிறுவயது கனவை நினைவாக்கும் திட்டம் காத்துக்கொண்டிருந்தது.

சிறுவன் எலானின் கனவு என்ன :

1971 June 28 ஆம் நான் தென்னாப்பிரிக்காவில் எலான் பிறந்தார். 1979-இல் இவரது தந்தையும், தாயும் விவாகரத்துப் பெற்ற பின் எட்டு வயது சிறுவனாகிய எலான் மஸ்க் தனது தந்தையுடன் வசிக்க ஆரம்பித்தான். புத்தகங்கள் மட்டுமே எலான் மஸ்க்கின் நண்பர்கள் ஆனது. புத்தகங்களைப் படித்து  கம்ப்யூட்டர் புரோகிராம்களை கற்று 1983இல் பிளாஸ்டர் என்ற கம்ப்யூட்டர் வீடியோ கேமை வடிவமைத்தார் எலான் மஸ்க். இதை ஒரு வீடியோ கேம் நிறுவனம் 500 டாலர் கொடுத்து வாங்கியது 12 வயது எலானின் முதல் சம்பளம். இதை வைத்து மீண்டும் புத்தகங்கள் வாங்கினான் எலான். எலான்  மஸ்க்கின் கவனம் செவ்வாய் கிரகத்தின் மீது திரும்பியது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற முடியுமா என்று தேடினான் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்ததும் அதை தனது இலக்காக வைத்துக்கொண்டான் அப்போது எலானின் வயது 15. இதுதான் சிறு வயது எலானின் கனவு.

ரஷ்ய விஞ்ஞானிகளை சந்தித்த எலான் மஸ்க்:

ரஷ்ய விஞ்ஞானிகளை சந்தித்த எலான் மஸ்க் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப ஒரு ராக்கெட் செய்து தர முடியுமா எனக் கேட்டார் இப்படி ஒரு கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரஷ்ய விஞ்ஞானிகள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவே முட்டிமோதி முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை ஒரு தனி மனிதன் கேட்கிறானே என்பதை எண்ணி ஆடிப் போனார்கள். ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம் என்று கைவிரித்து விட்டார்கள்.
"ஒன்று முக்கியம் என்றால் அதில் தோல்விக்கு அதிக இடம் என்றாலும் அதை செய்ய வேண்டும்" என்பது அவரது திரு வாசகம். அதற்கான அனுபவங்களை அவர் இளம் வயதிலேயே பெற்று விட்டார். அவரது கனவுகளுக்கு பணமே பிரதான தேவையாக இருந்தது.

நிராகரிக்கப்பட்ட எலான் மஸ்க்:

 1995 ஆம் ஆண்டு நெட்ஸ்கேப் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்தார்.அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் வேலையை தேடுவதை விட உனக்கான வேலையை நீயே உருவாக்கு என்ற முடிவிற்கு வந்தார் இலான் மஸ்க். எதையும் முன்கூட்டியே யோசிப்பது இலான் மஸ்க்கின் தனிச் சிறப்பு. அதை போல்  எதிர் காலத்தில் கணினியின் தேவை இன்றியமையாதது என்று  நினைத்தார்.

செய்வாய் திட்டத்தில் காலடி எடுத்து வைத்த எலான்: 

மீண்டும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை சந்தித்தார் எலான். ஒரு ராக்கெட் செய்ய 8 மில்லியன் டாலர் தேவைப்பட்டது. இலான் மஸ்க் கனவு வானை தொட்டது என்றாலும் அடிப்படையில் அவர் ஒரு தொழிலதிபர். எந்த ஒரு திட்டத்திற்கும் பட்ஜெட் உண்டு என்று அறிந்து மலிவு விலையில் ராக்கெட் செய்வது என முடிவெடுத்தார். அதற்காக ராக்கெட் செய்வற்கான புத்தகங்களை படிக்க ஆரம்பித்தார். ராக்கெட் செய்வது என்பது வெளியில் பாகங்களை வாங்கி அதை அசெம்பில் செய்வதாகும். இதனால் அதிக பொருட் செலவு ஆகும் என்பதால் அதை நாமே செய்வதென தீர்மானித்தார்.

பேபால் நிறுவனத்தை இ-பே  நிறுவனம் வாங்கியது. இச்சமயத்தில் அவருடைய பேபால் பங்குகள் விற்கும் பொழுது அவரது கையில் பணத்தின் இருப்பு அதிகமானது. இதன் மூலம் 180 மில்லியன் டாலர் கிடைத்தது. இதில் இருக்கும் 100 மில்லியன் டாலரை கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கினார். அதில் ஒய்வு பெற்ற  ஆராய்ச்சியாளர்களை பணிக்கு அமர்த்தினார். உலகின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம் இது ஆகும். 70-மில்லியன் டாலரை டெஸ்லா எனும் மின் கார் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இவர் முதலீடு செய்தார்.  இருக்கும் 10-மில்லியன் டாலரை சூரிய ஒளி மின்திட்டத்தில் முதலீடு செய்தார். இப்பொழுது அவர் கையில் சுத்தமாக பணம் இல்லை. இருப்பினும் ஸ்பேஸ் எக்ஸ் கை  தரும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கினார்.

தோல்வியை கண்டு அஞ்சாத எலான்:

2006 ஆம் ஆண்டு இவர் அனுப்பிய முதல் ராக்கெட் 33 வினாடிகளில் வெடித்து சிதறியது. இரண்டாவது ராக்கெட் விண்வெளி சுற்று வட்டப் பாதையை அடையும் சிறிய நேரத்திற்கு முன்பு இன்ஜின் கோளாறால் வெடித்து சிதறி கடலில் விழுந்தது. மூன்றாவது நாஸாவிடமிருந்து ராக்கெட் ஏவுவதற்கு அனுமதி பெற்றார். ஆனால் அது வெடித்து. இன்னொரு பக்கம் டெஸ்லா நிருவத்தில் இலான் மஸ்க்கை  காரணம் காட்டி யாருமே முதலீடு செய்ய முன்வரவில்லை. இவருடைய குழந்தையையும் பிறந்த பத்து நாட்களில் இறந்தது. மனைவியும் விவாகரத்து செய்தார். அவருடைய இரண்டு நிறுவனங்களும் கடுமையான நிதிச்சுமையில் இருந்தது.

எலானுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு: 

நாசா எலானுக்கு ஒரு கடைசி வாய்ப்பு அளித்தது. அவரும் இந்த ராக்கெட் ஆவது விண்ணை அடையுமா என நகம் கடித்த படி பார்த்தார். ராக்கெட் சுற்று வட்டப்  பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அவரது எதிரிகளின் கனவை தவிடு பொடியாக்கி ஒரு முத்திரை படைத்தார். Tesla நிருவனத்திருக்கு முதலீடுகள் கிடைத்தது. குறைந்த அளவில் எலக்ட்ரிக் கார்களை சாலையில் ஓட விட்டது. Tesla-வை விளம்பர படுத்த நல்லதொரு சந்தரப்பத்திற்காக காத்திருந்தார் எலான்.

எலானின் வித்யாசமான சிந்தனை: 

செயற்கைக்கோள்களை சுற்று வட்டப்பாதையில் ஏவிய பின் ராக்கெட் பூஸ்டர்கள் தீ கக்கிய படி கடலில் விழுந்துவிடும். அதை மீண்டும் பயன் படுத்தலாம் மேலும் செலவை குறைக்கலாம் என கண்டறிந்தார். பல சிக்கல்கள் மற்றும் தோல்விகளுக்கு பிறகு இதிலும் வெற்றி கண்டார். உலகமே திரும்பி பார்த்தது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை சுமந்து செல்ல பால்கன் 9 என்ற பிரம்மாண்ட ராக்கெட்டை தயார் செய்தார் அந்த ராக்கெட் 17000 கிலோ எடையை தூக்கி செல்லும் வல்லமை படைத்தது. சுமந்து செல்லும் திறனை சோதித்துப் பார்க்க பெரிய இரும்புப் பெட்டகம் அல்லது காண்ரீக்ட் கல்லை வைப்பார்கள். ஆனால் எலான் தனது 1 கோடி மதிப்பிலான Tesla காரை வைக்க திட்டமிட்டார். விண்வெளியில் பயணம் செய்யும் முதல் கார். செவ்வாய் கிரகத்தின்  சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பப் போகிறேன் முடிந்தால் அதை தரையிறக்கம் செய்வேன் என அறிவித்தார். விண்வெளி உலகின் புதிய முயற்சி. அன்றிலிருந்து உலக மீடியாக்களின் பேசும் பொருளாகிவிட்டது டெஸ்லா கார். இன்னும் இவர் பல்வேறு சாதனைகளுக்கு அடிக்கல் நாட்டிக் கொண்டுஇருக்கிறார். இவருடைய வெற்றி நமக்கு ஒரு வழிகாட்டி.