kiladi-village


தமிழக வரலாறு

கீழடி கிராமம் :

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின், கீழடி ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும்.. மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் கீழடி கிராமம் அமைந்துள்ளது.

சங்க காலப் பாடல்களில் (சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்றவற்றில்) குறிப்பிடப்பட்டிருந்த பல பொருள்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பில் இந்த ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் மிக மிக அரிய தகவல்கள் கிடைத்துள்ளன.

1974 ஆம் ஆண்டில் விவசாயத்திற்காக கிணறு ஒன்று தோண்டப் பட்டது. திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் கீழடி பள்ளியின் ஆசிரியர் ஆவார். அவரிடம் மாணவன் ஒருவன் தோண்டப்பட்ட கிணற்றிலிருந்து கிடைத்த செங்கற்களை காண்பித்தான். அவர் அந்த செங்கற்களை பார்த்து அவை சங்க காலத்தைச் சேர்ந்தது என உணர்ந்தார். இதுவே கீழடி வரலாற்றில் முதல் படி ஆகும்.

திரு. வேதாசலம் திரு அமர்நாத் மற்றும் திரு ராஜேஷ் ஆகியோர் பண்டைய பொருள்கள் கிடைத்த அந்த கிணற்று நிலத்தின் உரிமையாளர் திரு திலீப்கான் துணையோடு சரியாக 37 ஆண்டுகள் கடந்து 2013 தொழில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின் கீழடியைத் தேர்வு செய்து மத்திய அரசிடம் அனுமதி பெற்று 2015 மட்டும் 2016-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 2015ம் ஆண்டு 43 குழிகளும், 2014ஆம் ஆண்டு 53 குழிகளும் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆராய்ச்சியில் பல தகவல்கள் கிடைத்தன. இந்தியாவில் இதுவரை கிடைக்கப்படாத மிகப் பழமையான பொருள்கள் ஆராய்ச்சியின் மூலம் கிடைத்தன. அவ்வாறு கிடைத்த பொருட்கள் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் என கருதப்படுகிறது. மேலும் இந்த பொருட்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன்பின் 6000 அதிகமான பொருட்கள் கிடைத்தது.

மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்ட நீர் வடிகட்டல் அமைப்பு, தொழிற்கூடங்கள் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள், அந்த பொருட்களில் அடங்கிய ஓடுகள் அவற்றின் (பாரசீக மொழியில்) எழுதப்பட்ட சொற்கள் ஆகியவை இங்கு கண்டறியப்பட்ட பொருள்களில் காணப்படுகிறது. இதன் மூலம் இங்கு பாரசீகத்துடன் அப்போதே வணிகம்நடைபெற்றதையும் அறியலாம். அகழ்வாராய்ச்சியானது இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாகவும் மேலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஆய்வகவும் கருதப்படுகிறது.

43 குழிகள் வரையே என்பது குறிப்பிடத்தக்கது.வெறும் 50 செண்ட் அளவில் தோண்டிப் பார்த்ததில் வெளிப்பட்ட பழந்தமிழரின் நாகரிகம், இன்னும் உள்ள 150 ஏக்கர் நிலப்பரப்பிலும் ஆய்வு செய்தால் ஒரு மிகப்பெரிய தொல் நகரம் வெளிப்பட வாய்ப்புள்ளது.

அதன் பின் தொடரப் பட்ட முதல் கட்ட ஆய்வின்போது மண்டை ஓடுகள், நாணயங்கள், எலும்புகள், தாழிகள், நூல் நூற்கும் கருவி முதலிய கருவிகள் கிடைத்தன. மேலும் முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டைகள், சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள் போன்றவை இங்கு கிடைத்துள்ளன.

வீடுகளில் குளியலறைகள் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது. தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் திணிவுடைய மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைத்திருக்கின்றன.
மேலும் வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, மேற்கூரைகள் ஓடுகள் வேயப்பட்டிருந்திருக்கலாம் என்பதையும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்பதனையும் இங்குக் கிடைத்துள்ள சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த இடத்தில் கருப்பு-சிவப்பு வண்ணம் கொண்ட மண் குவளைகள், உறைக்கிணறுகள், பானை செய்யும் தொழில் கூடங்கள், வெறும் கையால் அமுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வடி நீர் கால்வாய்கள், கூரை ஓடுகள் போன்ற பல அமைப்புகள் காணப்பட்டன. இதுவரை இங்கு 5,820 பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

மேலும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், யானை தந்தத்தில் செய்யப்பட்ட ஆபரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், சுடுமண் விளையாட்டுப் பொருட்கள், இரும்பு கருவிகள்], தந்தத்தால் செய்யப்பட்ட சீப்புக்கள், இரத்தின கற்களால் ஆன ஆபரணங்கள், கற்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சுடு மண் மணிகள், வட்ட சில்லுக்கள், காதணிகள், தக்களிகள், மனித மற்றும் விலங்குகளின் வடிவில் பொம்மைகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற உடைந்த பானை ஓடுகள் மற்றும் ரோமானியா சின்னம் பொறிக்கப்பட்ட பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடி வைகை நதிக்கரைக்கு மிக அருகில் இருப்பதால் நகர நாகரிகத்தில் சிறந்த விளங்கியதர்கான தெளிவு கிடைத்துள்ளது. செங்கல் கட்டுமானத்தில் வீடுகள், வடிகால் அமைப்புகள், தொழில் கூடங்கள் மற்றும் வணிகம் ஆகியவற்றை பார்க்கும் போது இரண்டாம் நகர நாகரிகம் கங்கை சமவெளி பகுதிகளில் தோன்றும்போது அல்லது அதற்க்கு முன்னதாகவே இங்கு இரண்டாம் நகர நாகரிகம் தோன்றி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது

(கிமு 6 ஆம் நூற்றாண்டு).

உலகின் மிகவும் பழமை வாய்ந்த கலாச்சாரத்தை உடையவர்கள் தமிழர்கள். கீழடியில் கிடைத்த ஆதாரங்களால் இப்பொழுது உலகமே தமிழர்களை திரும்பிப் பார்க்கிறது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆங்காங்கே பரவிக் கிடப்பதால் இதை அடுத்து மாநில தொல்லியல் துறை எந்த இடத்தில் ஆய்வு செய்ய வேண்டும் திட்டமிட வேண்டும். கீழடியில் பூமிக்கடியில் புதைந்திருந்த 350 நீல சுவர் மேக்னா மீட்டர் என்னும் கருவியால் கண்டறியப்பட்டது. இக்கருவியின் மூலம் மேலும் பல ஆய்வுகளை சிறப்பாக செய்ய முடியும் என தொல்லியல் துறை நம்புகிறது.

தமிழன் யார் என்ற கேள்விக்கு தற்போது பல்வேறு பதில்கள் வைத்துக் கொண்டிருக்கின்றன. தமிழன் இப்படி யெல்லாம் வாழ்ந்தானா என தமிழன் இனத்தால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விடயங்கள் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் நம் தமிழனின் புகழ் உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது.